Tata Punch ev 2 ஆண்டுகளில் 70,000 கிமீ பயணம் - உரிமையாளரின் அனுபவம்
Tata Punch.ev 70,000 km owner review: Tata Punch.ev உரிமையாளர் ஒருவர் தனது 2 ஆண்டுகளில் 70,000 கிமீ பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, “இந்த EV எனக்கு பெரும்பாலும் சிரமமில்லாத, நம்பகமான அனுபவத்தை வழங்கியது” என்கிறார்.
நம்பகத்தன்மை, சேவை
45,000 கிமீ-இல் பின்புற சஸ்பென்ஷனில் சிறிய சத்தம் ஏற்பட்டது. அது உத்தரவாதத்தில் (warranty) மாற்றப்பட்டது. இதைத் தவிர பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை.
ஒவ்வொரு சிறிய சர்வீஸ் (7,500 கிமீ) சுமார் ரூ.3,000, பெரிய சர்வீஸ் (15,000 கிமீ) சுமார் ரூ.6,000 என செலவானது. 60,000 கிமீ சர்வீஸில் குளிரூட்டும் திரவம் மாற்றப்பட்டதால் ரூ.9,000 செலவானது.

பேட்டரி, சார்ஜிங்
HV Battery SOH 94 சதவீதம் உள்ளது. குறைந்தது 2 லட்சம் கிமீ வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் 3.3kw AC சார்ஜர் பயன்படுத்தப்பட்டு, சில நேரங்களில் DC சார்ஜிங் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் Punch.ev பழைய மாடல்கள் 25kWh வரை மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். புதிய மாடல்கள் 60kWh வரை சார்ஜ் செய்யும் திறன் பெற்றுள்ளன.
டயர்கள், பராமரிப்பு
டயர்கள் 70,000 கிமீ வரை நீடித்துள்ளன. TPMS (Tyre Pressure Monitoring System) பயன்படுத்தியதால் puncture பிரச்சினைகள் குறைந்தன.

சிறிய குறைகள்
- SOC 20 சதவீதத்திற்கு கீழே சென்றால் ரேஞ்ச் திடீரென குறைகிறது.
- Tata, பழைய வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பேட்டரி வசதி வழங்கவில்லை.
- பின்புற AC vent, roof lamp, grab rail போன்ற வசதிகள் இல்லை.
- headlights மழையில் பயனற்றதாக உள்ளன.
- மாற்றங்கள் (Nodifications): Sunfilm, TPMS, dashcam, spare wheel போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
முடிவு
உரிமையாளர், “முன்பு பெட்ரோல் காரில் மாதம் ரூ.12-15 ஆயிரம் செலவானது. EV-க்கு மாறியதால் சேமிப்பு அதிகமானது. ஆனால் தற்போது பயணம் குறைந்ததால், Punch.ev-ஐ வைத்திருக்க வேண்டுமா என சிந்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |