வருமான வரி தாக்கல் புதிய சட்டம்... அபராதம் 100 சதவீதம்: நிதியமைச்சர் அறிவிப்பு
புதிய வருமான வரிச்சட்டங்கள் ஏப்ரல் 1 முதல் அமுல்படுத்தப்படும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறை எளிமையானதாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கூடுதல் அவகாசம்
புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்ததைவிட அதிக அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறைவான முறைகேடுகள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது என்றும், வாகன விபத்துக்கான இழப்பீட்டிற்கு வரி விலக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து கால காப்பீடுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைக் கொண்டவர்கள் ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.
சிறு கட்டணம் செலுத்தி வரி வருமானக் கணக்குகளைத் திருத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் போல் நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசரம் நீட்டிக்கப்படுகிறது.
வருமான வரி
குறைந்த வருமானம் கொண்ட சிறு வரிதாரர்கள் (Small Taxpayers), தங்களுடைய வருமானத்திற்கு வரி பிடித்தம் தேவையில்லை அல்லது குறைவாக இருக்க வேண்டும் என நினைத்தால், இனி வருமான வரி அதிகாரியிடம் (Assessing Officer) நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இதற்கு மாற்றாக விதிகளின் அடிப்படையில் இயங்கும் ஒரு தானியங்கி ஒன்லைன் முறை (Rule-based Automated Process) அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மிக எளிதாக 'Lower or NIL deduction certificate'-ஐப் பெற முடியும்.

அத்துடன், மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வருமான வரியைக் குறைப்பதன் மூலம் வரி செலுத்துவோருக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது.
சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு, இது ரூ.75,000 நிலையான விலக்குக்குப் பிறகு ரூ.12.75 லட்சமாக உயர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |