பிரபல பாடகியால் ஜேர்மன் அருங்காட்சியகத்தில் குவியும் இளம்பெண்கள்
பிரபல அமெரிக்கப் பாடகி ஒருவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஆல்பம் ஒன்று, மறக்கப்பட்டுப்போன 200 ஆண்டுகள் பழமையான ஜேர்மன் அருங்காட்சியகம் ஒன்றை நோக்கி இளம்பெண்கள் படையெடுக்கக் காரணமாக அமைந்துள்ளது.
200 ஆண்டுகள் பழமையான ஜேர்மன் அருங்காட்சியகம்
மேற்கு ஜேர்மனியில், Museum Wiesbaden என்னும் 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.
இந்நிலையில், திடீரென அந்த அருங்காட்சியகம் கவனம் ஈர்க்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக ஏராளம் இளம்பெண்கள் அந்த அருங்காட்சியகத்தை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
காரணம் என்ன?
விடயம் என்னவென்றால், பலராலும் விரும்பப்படும் அமெரிக்கப் பாடகியான டெய்லர் ஸ்விட், சமீபத்தில் ‘ The Life of a Showgirl’ என்னும் இசை ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்.
அந்த ஆல்பத்திலுள்ள ’The Fate of Ophelia’ என்னும் பாடலின் துவக்கம், Wiesbaden அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள Ophelia என்னும் பெண்ணின் ஓவியத்தை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது.
டெய்லர் ஸ்விஃப்ட், அந்த ஓவியத்திலிருக்கும் Opheliaவைப்போலவே காட்சி தர, அவரது வீடியோ வெளியான மூன்றே நாட்களில் 27 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்வையிடப்பட, மக்கள் கவனம் Ophelia ஓவியத்தை நோக்கித் திரும்பியுள்ளது.
ஆகவே, உண்மையான Opheliaவைப் பார்க்க, அதாவது, Wiesbaden அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள Ophelia என்னும் பெண்ணின் ஓவியத்தைக் காண மக்கள் கூட்டம் முண்டியடிக்கிறது.
குறிப்பாக, இளம்பெண்களும் பதின்மவயதுப் பெண்களும் Ophelia ஓவியத்தின் முன் நின்று செல்பி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களாம்.
இதற்கிடையில், திடீரென தங்கள் அருங்காட்சியகத்துக்கு மக்கள் ஏராளம் பேர் வருவதைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கும் அருங்காட்சியக செய்தித்தொடர்பாளரான Susanne Hirschmann, முதலில் காரணம் தெரியாமல் திகைத்ததாகவும், பிறகுதான் டெய்லர் ஸ்விஃப்டின் ஆல்பம் குறித்து அறிந்துகொண்டதாகவும் தெரிவிக்கிறார்.
இப்படி ஏராளம் மக்கள் எங்கள் அர்ங்காட்சியகத்துக்கு வர காரணமாக இருக்கும் டெய்லர் ஸ்விஃப்டுக்கு நன்றி என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |