Taylor Swift: யாரும்மா நீ? பாடகி குறித்து மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி கருத்தரங்கு!
பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்டை குறித்து ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில் ஒரு கல்வி கருத்தரங்கு நிகழவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.
Taylor Swift
அமெரிக்காவை சேர்ந்த 33 வயதான பாடகி தான் டெய்லர் ஸ்விப்ட். பாடலாசிரியராகவும், பாடகியாகவும் பிரபலமான இவர் பாப் பாடல்களை பாடுவதில் சிறந்து விளங்குகின்றார். பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு இருகின்றார். இவர் கிராமி விருதையும் தனக்காக பெற்றுள்ளார்.
இவர் பல நாடுகளில் தனது இநை நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து உலகமுழுவதும் கொரானோ தாக்கம் அதிகரிக்கப்பட்டதை அடுத்து அவை அனைத்தையும் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் அண்மையில் தொடங்கி 5 கண்டங்கள், 17 மாநிலங்களில் 131 இசைநிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ளார். இவரது இநை நிகழ்ச்சியின் காரணமாக கொரோனாவுக்கு பின் முடங்கிய பொருளாதாரம் மீண்டும் எழுச்சியடைந்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆகவே இவரது வெற்றியை குறித்து பல்கலைக்கழகங்களில் கருத்தரங்கு செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.
Taylor Swift கருத்தரங்கு
இசைத்துறை மூலம் பாப் கலாசாரம், பொருளாதாரம் என அனைத்திலும் டெய்லர் ஸ்விப்ட்டின் தாக்கம் குறித்து முதல் கல்வி கருத்தரங்கை ஆஸ்திரேலியா நடத்துவதற்கு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
2024 ஆண்டு பிப்ரவரி 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஆன்லைன் வழியாகவும் இந்த கருத்தரங்கம் நடைபெறவிருகின்றது எனலாம்.
மேலும் இது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்பட 7 பல்கலைக்கழகங்களை சேர்ந்த அறிஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |