பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் - டிராவிஸ் கெல்ஸ் நிச்சயதார்த்தம்: மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!
பிரபல பாப் இசை பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் டிராவிஸ் கெல்ஸ் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்க கால்பந்து வீரர்(NFL) டிராவிஸ் கெல்ஸ் மற்றும் பாப் இசை பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளனர்.
IT'S A LOVE STORY BECAUSE TAYLOR AND TRAVIS ARE ENGAGED!!!!! pic.twitter.com/sMs7jslzji
— Cosmopolitan (@Cosmopolitan) August 26, 2025
இவர்களது இந்த அறிவிப்பை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பதிவு 30 நிமிடங்களில் 1.7 மில்லியன் பார்வையாளர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது.
அந்த பதிவில், உங்களுடைய ஆங்கில ஆசிரியரும், உடற்கல்வி ஆசிரியரும் திருமணம் செய்யப் போவதாக தலைப்பிட்டு அறிவித்துள்ளனர்.
2023ம் ஆண்டு இவருக்கும் இடையிலான உறவு தொடங்கியுள்ளது.
New Height என்ற தன்னுடைய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டெய்லர் ஸ்விஃப்ட் “எராஸ் டூர்” என்ற நிகழ்ச்சியின் போது சந்திக்க முயன்று அது தோல்வியில் முடிந்தது குறித்து டிராவிஸ் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |