TCS வரி யாருக்கெல்லாம் பொருந்தும்? அரசு விதித்த வரம்புகள் மற்றும் முக்கிய விவரங்கள்
அரசாங்கத்தால் விதிக்கப்படும் TCS வரியை பற்றிய முழு விவரங்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வருமான வரி, நேரடி வரி மற்றும் மறைமுக வரி போன்ற வரிகளை அரசு நம்மிடம் இருந்து வசூல் செய்கிறது. இதில் நேரடி வரி என்பது தனிப்பட்ட வருமானத்தில் இருந்து நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்தப்படுவதாகும்.
மற்றொன்று மறைமுக வரி என்பது, விற்பனையாளர்கள் அரசிடம் செலுத்த வேண்டிய வரியாகும். இதில் மறைமுக வரிகளுக்கு மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (TDS), மூலத்தில் சேகரிக்கப்பட்ட வரி (TCS) ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
istock
இந்த இரண்டு வரிகளையும் ஒவ்வொருவரும் மாற்றாக பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த இரண்டு வரிகளுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. அவற்றில் TCS வரி பற்றிய விவரங்களை நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
TCS வரி (Tax Collected at Source)
TCS வரி என்பது சேகரிக்கப்படும் வரியாகும். அதாவது, விற்பனையாளரால் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியாகும். பொருட்களின் விற்பனையின் போது வாங்குபவரிடம் இருந்து இந்த வரியானது வசூலிக்கப்படுகிறது.
வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 206C-ன் படி, TCS பொருந்தக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள் குறிப்பிடப்படுகிறது. பொருட்களின் விற்பனையில் TCS வரிக்கான வரம்பு ரூ. 50 லட்சம் ஆகும்.
TCS பரிவர்த்தனைகள்
TCS வரியானது மரம், குப்பை, கனிமங்கள், மதுபானம், வனப் பொருட்கள், கார்கள், Toll ticket போன்றவற்றின் விற்பனைக்கு பொருந்தும்.
istock
TCS வரம்புகள்
பிரிவு 206C (1H) இன் கீழ், ரூ. 50 லட்சத்தை தாண்ட கூடிய பொருட்களின் விற்பனைக்கு TCS வரி பொருந்தும்.
TCS விகிதங்கள்
பொருட்களின் விற்பனையில் TCS வரி வசூல் விகிதம் ஆனது, ரூ.50 லட்சத்துக்கும் மேல் இருந்தால் விற்பனைத் தொகையில் 0.1 % ஆகும். இந்த வரியானது பொருட்களின் விற்பனையின் போது விற்பனையாளரால் வசூலிக்கப்படுகிறது.
istock
யாரால் வசூலிக்கப்படுகிறது?
பொருட்களை விற்பனை செய்யும் தனிநபர் அல்லது நிறுவனம் மூலம் TCS வசூல் செய்யப்படுகிறது.
நிலுவைத் திகதி
TCS ஆனது சப்ளை செய்யப்படும் மாதத்தில் கழிக்கப்படும். அதாவது, சப்ளை செய்யப்பட்ட மாதத்தின் முடிவிலிருந்து 10 நாட்களுக்குள் Deposit செய்யப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |