இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன்... ரத்தன் டாடாவின் இந்த நிறுவனத்தில் பணிநீக்கம் தீவிரம்
நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ரத்தன் டாடாவின் TCS நிறுவனம் இழப்பீடாக இரண்டு ஆண்டுகள் வரையில் சம்பளம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணியாளர் மறுசீரமைப்பு
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான TCS, வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப திறன்கள் இல்லாத ஊழியர்களை விடுவித்து, ஒரு பெரிய அளவிலான பணியாளர் மறுசீரமைப்பை மேற்கொண்டு வருகிறது.
டிசிஎஸ் தனது உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதத்தை அல்லது சுமார் 12,000 ஊழியர்களை அடுத்த ஆண்டு பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மூன்று மாத அறிவிப்பு கால ஊதியம், ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான, அவர்களின் சேவை ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து சம்பளத்துடன் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
மேலும், 8 மாதங்கலுக்கும் மேலாக எந்த வேலையிலும் ஈடுபடுத்தப்படாத ஊழியர்களுக்கு வெறும் 3 மாத சம்பளம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்படுகிறது. மட்டுமின்றி, இழப்பீடுடன் வேறு நிறுவனங்களில் வேலை ஏற்படுத்திக்கொள்ள மூன்று மாதங்களுக்கான சேவை கட்டணமும் TCS நிர்வாகம் வழங்க முன்வந்துள்ளது.
சட்டவிரோதமாக
ஓய்வு பெறும் வயதை நெருங்கும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறும் விருப்பங்களையும் நிறுவனம் விரிவுபடுத்துகிறது, இதனால் அவர்கள் காப்பீடு போன்ற அனைத்து தொடர்புடைய சலுகைகளையும் பெற முடியும்.
சமீபத்திய மாதங்களில், TCS நிறுவனம் ஊழியர்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்வதாகவும், கட்டாய ராஜினாமா செய்யப்படுவதாகவும் முன்னாள் ஊழியர்களால் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |