பல ஆயிரம் டாலருக்கு விற்பனையான....பிரித்தானிய மகாராணி உபயோகித்த டீ-பேக்
பிரித்தானிய ராணி பயன்படுத்திய டீ-பேக் 12,000 டாலருக்கு விற்பனை.
நம்பகத்தன்மைக்கான சான்றிதழ்களில் சிறப்பான நிறுவனம் (IECA) வழங்கும் நம்பிக்கை சான்றிதழுடன் டீ-பேக் விற்பனை.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்(Queen Elizabeth II) 1998ல் உபயோகித்த டீ-பேக் (Tea bag) 12,000 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் நீண்டகாலம் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், தனது 96 ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மகாராணியின் மறைவிற்கு 12 நாள் வரை துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் eBay இல் பயனர் ஒருவர் பிரித்தானிய மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சியை நினைவுகூரும் வகையில், மறைந்த ராணி பயன்படுத்தியதாக கூறப்படும் தேநீர் பை-யை விற்பனைக்கு அறிவித்துள்ளார்.
இந்த டீ பேக் ராணி இரண்டாம் எலிசபெத்-தால் பயன்படுத்தப்பட்டது, மேலும் இது அவரது மாட்சிமை-க்கு உதவ அழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளரால் விண்ட்சர் கோட்டையிலிருந்து கடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பாக விற்பனையாளர் அளித்து விளக்கத்தில், "இது 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் CNN இல் நீங்கள் பார்த்திருக்கக்கூடிய டீ பேக் என தெரிவித்துள்ளார்.
மேலும் பயன்படுத்தப்பட்ட இந்த டீ பேக் மதிப்புள்ள IECA (நம்பகத்தன்மைக்கான சான்றிதழ்களில் சிறப்பான நிறுவனம்) வழங்கும் நம்பிக்கை சான்றிதழுடன் வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதனை அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள டிகாட்டூரை சேர்ந்த விற்பனையாளர் தேநீர் பை-யை மிகவும் அரிதானது என விவரித்துள்ளார்.
இந்த டீ பேக் தற்போது இ-காமர்ஸ் தளத்தில் $12,000க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: அரச வாரிசுகளை அறிவித்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்: டயானாவுக்கு பிறகு இளவரசி பட்டம் பெறும் கேட்!
இதனை போன்று பிரித்தானிய ராணியின் கையால் கையொப்பமிட்ட ஒரு கையெழுத்தும் $11,249 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.