பள்ளி வகுப்பறையில் ஆபாச வீடியோ பதிவு செய்த ஆசிரியர்: மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் பள்ளி வகுப்பறையில் ஆபாச வீடியோகளை பதிவு செய்த அறிவியல் ஆசிரியர் சமந்தா பீர் பள்ளியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி வகுப்பறையில் ஆபாச வீடியோ
அமெரிக்காவின் அரிசோனாவில் (Arizona) உள்ள லேக் ஹவாசு நகரின் தண்டர்போல்ட் நடுநிலை பள்ளியில் (Thunderbolt Middle School) அறிவியல் ஆசிரியராக சமந்தா பீர் பணியாற்றி வந்தார்.
இருப்பினும் கூடுதல் வருமானத்திற்காக ஒன்லி ஃபேன்ஸ் என்ற எக்ஸ்-ரேட்டட் வலைத்தளத்திற்கு க்ளோ கார்ட்டர் என்ற பயனர் பெயரில் தனது ஆபாச வீடியோவை ஆசிரியர் சமந்தா பீர் (Samantha Peer) பதிவேற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் அறிவியல் ஆசிரியர் சமந்தா பீர்ரின் ஆபாச வீடியோவை பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கண்டறிந்த பிறகு சமந்தா பீரின் மறுபக்க வாழ்க்கையும் வெளிவந்துள்ளது.
Facebook
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அறிவியல் ஆசிரியர் சமந்தா பீர் தனது ஆபாச வீடியோக்களுக்காக பள்ளி வகுப்பறையை பயன்படுத்தியுள்ளார் என்பதே, இதனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சமந்தா-வை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வீடியோக்களில் எந்த பள்ளி சிறார்களும் கலந்து கொள்ளவில்லை அல்லது ஈடுபடுத்தப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
என்னை மன்னித்துவிடுங்கள்
நான் செய்த தவறுகளுக்காக நான் விரும்பும் கற்பிக்கும் வேலையை இழப்பதன் மூலம் அதன் விளைவுகளை ஏற்கனவே செலுத்தி வருகிறேன்.
தனது மாணவர்களுக்கு அறிவியல் கற்பிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், எனக்கு ஒவ்வொரு நாளும் அது மகிழ்ச்சியை தந்தது என சமந்தா பீர் தெரிவித்துள்ளார்.
Facebook
நிலைமையை திரும்பிப் பார்க்கும் போது, பள்ளி நேரத்திற்கு பிறகு வகுப்பறையில் வீடியோவை உருவாக்கியதற்காக நான் முற்றிலும் வருந்துகிறேன், ஆனால் எனது மோசமான நிதி நிலைமையில் சிக்கிக்கொண்டேன், என் குடும்பம் உயிர்வாழ ஒரே வழி இதுதான் என்று உணர்ந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது வேலையை விட்டு வெளியேறியதிலிருந்து, பல மாணவர்கள் சமூக ஊடகங்களில் தன்னைப் பின் தொடர தொடங்கியுள்ளனர் என்று அவர் ஆச்சரியப்படத்தக்க வகையில் குறிப்பிட்டுள்ளார்.