நாஜி சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட 14 வயது சிறுவன்: பிரான்சில் ஆசிரியரை கத்தியால் குத்திய பயங்கரம்
பிரான்சில் 14 வயது சிறுவன் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் ஆசிரியருக்கு கத்திக்குத்து
புதன்கிழமை வடக்கு பிரான்சின் பென்ஃபெல்ட் நகரில் 14 வயது மாணவன் ஒருவர் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியின் இசை ஆசிரியர் மீது இந்த கொடூர தாக்குதல் நடந்த மாணவன் நாஜி சித்தாந்தத்தின் மீது ஆர்வம் கொண்டவர் என விசாரணை அடிப்படையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
அதே நேரத்தில் பிரெஞ்சு ஊடகங்கள் வழங்கிய தகவலில், தாக்குதலுக்கு பிறகு 14 வயது சிறுவன் தன்னை தானே கத்தியால் தாக்கி கொண்டதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தற்போது சிறுவன் உயிர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியரின் உடல்நிலையில் முன்னேற்றம்
சிறுவனால் முகத்தில் கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியர் அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்று பிரான்ஸ் கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |