17 வயது மாணவருடன் மீண்டும் மீண்டும் உறவு..தீவிர விசாரணையில் ஆசிரியை
அமெரிக்காவில் 17 வயது மாணவருடன் உறவுகொண்ட ஆசிரியை ஒருவர் தீவிர விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
மாணவருடன் உறவு
கன்சாஸைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியை நிக்கோல் ஹெர்னாண்டஸ். இவர் மாதத்தின் சிறந்த ஆசிரியை விருது பெற்றவர் ஆவார். 
நிக்கி பைர்ட் என்று அழைக்கப்படும் இவர், 17 வயது மாணவர் ஒருவருடன் உறவுகொண்டதனால் கைது செய்யப்பட்டது பரபரப்பானது.
குறித்த மாணவர் இரண்டாம் ஆண்டு பயிலும்போது நிக்கி அவருடன் மீண்டும் மீண்டும் உறவுகொண்டது தெரிய வந்தது.
அவர் பட்டம் பெற்ற சுமார் ஒரு வருடம் கழித்து, கூறப்படும் உறவு குறித்த துப்பு கிடைத்த பிறகு மே மாதத்தில் சட்ட அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.
விசாரணை
கைது செய்யப்பட்ட நிக்கி, பிணை பத்திரம் தாக்கல் செய்து சூன் மாத தொடக்கத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஆசிரியை மீதான நான்கு குற்றச்சாட்டுகளிலும் விசாரணையை எதிர்கொள்ள போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி தீர்மானத்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் மீதான அடுத்த விசாரணை டிசம்பர் 19ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |