ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று... மாணவிக்கு பெண் ஆசிரியரால் ஏற்பட்ட கொடூரம்
ரஷ்யாவில் 9 வயது மாணவி ஒருவர் கடத்தப்பட்டு, சித்ரவதைக்கு உட்படுத்தி பெண் ஆசிரியர் ஒருவரால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது சொந்த மகன் மற்றும் மகளை வளர்ப்பதற்கு அதிகாரிகள் தடை விதித்ததால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாகவே குறித்த ஆசிரியர் மாணவி மீது இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
மாணவி Sofia Zhavoronkova-வின் தலை மற்றும் முகம் சிதைக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது 40 வயதான ஆசிரியர் உலியானா லான்ஸ்காயா கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி சோபியா மற்றும் அவரது தோழி அல்லா ஆகியோரை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்ற ஆசிரியர் லான்ஸ்காயா அவர்களுக்கு இனிப்பு மற்றும் ஐஸ் ஸ்கிரீம் உள்ளிட்டவைகளை சாப்பிடக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், திடீரென்று சோபியா மாயமாக, அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 272 தன்னார்வலர்கள் உதவியுடன் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மட்டுமின்றி, கடைசியாக சோபியாவுடன் காணப்பட்ட அல்ல சிறுமியை விசாரித்ததில், அவர் உண்மையை ஒப்புவித்துள்ளார். உடனடியாக ஆசிரியர் லான்ஸ்காயா குடியிருப்புக்கு விரைந்த பொலிசார், பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
அங்கே, மிகக் கொடூரமாக சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்ட நிலையில் சிறுமி சோபியாவின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனிடையே, ரயில் பயணத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் லான்ஸ்காயாவை இன்னொரு பொலிசார் குழு கைது செய்தனர்.
தமது சொந்த பிள்ளைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், மகன் மற்றும் மகளை வளர்ப்பதற்கு அதிகாரிகள் தடை விதித்ததற்கு பழிவாங்கவே குறித்த ஆசிரியர் மாணவியை கடத்தி கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.