தாலிபான்களின் அட்டூழியம்... மொத்தமாக ராஜினாமா செய்த பேராசிரியர்கள்
ஆப்கானிஸ்தானில் காபூல் பலகலைக்கழக துணை வேந்தரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 70 பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர் முகமது உஸ்மான் பாபுரி. பிஎச்.டி. முடித்தவர் மட்டுமின்றி அனுபவம் வாய்ந்தவர்.
தாலிபான்கள் அவரை நீக்கி விட்டு, பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ள முகமது அஷ்ரப் கைராத் என்பவரை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளனர். கடந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் கொலையை நியாயப்படுத்தி கைராத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனை விமர்சகர்கள் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர். மட்டுமின்றி, இவரை துணை வேந்தராக நியமித்துள்ளதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், காபூல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த துணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என மொத்தம் 70 பேர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.