ஆசிய கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத அணிகள் எது தெரியுமா?
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 3 அணிகள் இதுவரை ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை.
ஆசிய கோப்பை 2025
ஆசிய கோப்பை நாளை(செப்டம்பர் 9) தொடங்கி செப்டம்பர் 27 வரை துபாய் மற்றும் அபுதாபியில் T20 வடிவத்தில் நடைபெற உள்ளது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது.
1984 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில், அதிகபட்சமாக இந்தியா 8 முறை கோப்பையை வென்றுள்ளது.
இலங்கை அணி 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பையை வென்றுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் தோனி, ODI மற்றும் T20 ஆகிய இரு வடிவத்திலும் ஆசிய கோப்பை வென்ற ஒரே அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
வெற்றி பெறாத அணிகள்
ஆனால் ஆசிய கோப்பையில் 3 அணிகள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஹாங்காங் அணி இதுவரை 2004, 2008, 2018, 2022 ஆகிய 4 முறை ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்று விளையாடியுள்ளது. ஆனால், இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
அடுத்ததாக, ஐக்கிய அரபு அமீரகம் 2004, 2008, 2016 ஆகிய 3 முறை ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்று விளையாடி, இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
அதே போல் நேபாள அணி, 2023 ஆம் ஆண்டில் ஆசிய கோப்பையில் விளையாடியது.
ஆனால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த முறை, ஓமன் அணி முதல்முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |