புடினின் உத்தரவால் குடும்பங்களை விட்டு பிரியும் ரஷ்யர்கள்: கண்ணீருடன் உறவினர்கள்! புகைப்படம்
ரஷ்ய ஜனாதிபதி உத்தரவை ஏற்று ரிசர்வ் படைக்காக தயாராகும் ரஷ்யர்கள்.
கண்ணீருடன் விடை அனுப்பும் ரஷ்ய ரிசர்வ் படை வீரர்களின் உறவினர்கள்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து, சைபீரிய குடியேற்றங்களுக்கு செல்லும் ரஷ்ய ரிசர்வ் படை உறுப்பினர்கள் கண்ணீருடன் குடும்பங்களை விட்டு வெளியேறுகின்றனர்.
உக்ரைன் உடனான போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகள் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து, இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக ரஷ்ய ஜனாதிபதி புடின் 3,00,000 வீரர்களை உள்ளடக்கிய ராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டார்.
SKY NEWS
அதனடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய பொதுமக்களுக்கு அழைப்பு பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரிசர்வ் படைகளுக்காக அழைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவ தளங்களுக்கு வரத் தொடங்கி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: "என் அப்பா ராஜா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்" சக மாணவருக்கு இளவரசர் ஜார்ஜ் பதிலடி!
இந்நிலையில், ஒம்ஸ்க் பகுதியில் உள்ள சைபீரிய குடியேற்றமான Bolsherechyeக்கு குடும்பங்களை விட்டு செல்லும் ரஷ்ய ரிசர்வ் படை உறுப்பினர்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீருடன் காணப்பட்டனர்.
SKY NEWS
SKY NEWS
SKY NEWS