பிறந்தநாளை கொண்ட சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்த தொழிலதிபர்
tech millionaire adam robinson dies in plane crash: பஹாமாஸிற்கு பிறந்தநாளை கொண்ட சென்ற தொழிலதிபர், குடும்பத்துடன் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்த தொழிலதிபர்
அமெரிக்காவின் புளோரிடாவின் பாம் பீச் மாவட்டத்தில், லியர்ஜெட் 60 ரக விமானம் ஒன்று கடந்த நவம்பர் 1 ஆம் திகதி சாலையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்த நிலையில், விமானத்தில் பயணித்தவர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆடம் ராபின்சன் என்ற தொழில்நுட்ப தொழில்முனைவோர், தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் பஹாமாஸிற்கு புறப்பட்டுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கி கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இந்த விபத்தில், ஆடம் ராபின்சன், அவரது மனைவி ஹெலன் ஷார்ப், அவர்களது 2 சிறு குழந்தைகள், தம்பதியரின் தோழிகளான ரேச்சல் ரீட், சார்மி ஃபெஹ்ர், குழந்தை குழந்தைகளின் பராமரிப்பாளரான அனிதா மரியா செட்டினா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், விமானத்தின் விமானி, 55 வயதான ஜெஃப் கிரிகோரி மற்றும் 20 வயதான துணை விமானி நதாலியா கடேல்ஹா ஃபில்குவேராஸ் ஆகியோரும் உயிரிழந்தனர்.
ராபின்சன் Retention.com மற்றும் RB2B ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். இது மின்வணிக இணையதளப் பார்வையாளர்களை அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுடன் இணைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு வலைத்தளம் ஆகும்.

அவர் மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் தளமான ராப்லியின் இணை நிறுவனராகவும் இருந்தார்.
மோல்ட்செட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக தன்னை குறிப்பிட்டுள்ள அவர், முன்னதாக உலகளாவிய நிதிச் சேவை நிறுவனமான லேமன் பிரதர்ஸ் மற்றும் பார்க்லேஸ் வங்கிக் குழுமம் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.