6000., 8000., சரி போனா போகுது 10000: எலான் மஸ்க்கின் திட்டம் தான் என்ன?
ட்விட்டரில் பயனர்களுக்கு நாள் ஒன்றுக்கு இத்தனை ட்வீட்களை மட்டுமே காணமுடியும் என நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வரம்புகளை அறிவித்துள்ளார்.
6000 ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும்?
சனிக்கிழமையன்று, இந்த ட்வீட் வரம்புகளை அறைமுகப்படுத்திய மஸ்க், நாள் ஒன்றுக்கு சரிபார்க்கப்பட்ட பயனர்கள் 6000 ட்வீட்களையும், சரிபார்க்கப்படாத பயனர்கள் 600 ட்வீட்களையும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்கள் 300 ட்வீட்களை மட்டுமே பார்க்கவோ படிக்கவோ முடியும் என அறிவித்தார்.
அதற்கு முன்னதாகதாக, ட்விட்டரில் முதலில் அக்கவுண்ட் உள்ளவர்கள் மட்டுமே, அதாவது ட்விட்டரில் Log-in செய்யாமல் ட்வீட்களை பார்க்கவோ படிக்கவோ முடியாது என கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன.
Elon Musk/Twitter
இப்போது 10,000.,
ட்வீட் வரம்புகள் குறித்து அறிவித்த சில மணிநேரங்களில் எலான் மஸ்க், வரம்பில் எண்ணிக்கையை கூடுதலாக திருத்தம் செய்யப்பட்டதாக ட்வீட் செய்தார். அதில், 6000, 600 மற்றும் 300 என இருந்த எண்ணிக்கையை 8000, 800, 400 என அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மீண்டும் இரண்டு மணிநேரம் கழித்து, இப்போது ட்வீட்களின் வரப்பு எண்ணிக்கை 10000, 1000 மற்றும் 500 என மாற்றி அறிவித்தார். இப்போது இந்த எண்ணிக்கை தான் அமுலில் உள்ளது.
@ElonMusk/Twitter
வரம்புகள் விரைவில் தளர்த்தப்படும்
இந்த கட்டுப்பாடுகள் ட்விட்டர் பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ட்விட்டர் நிறுவனத்திற்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஆனால், இந்த திடீர் கட்டுப்பாடுகள் தற்காலிகமான நடவடிக்கை தான் என கூறியுள்ள எலான் மஸ்க், ஒவ்வொரு நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல் மிகப் பாரிய நிறுவனங்கள் வரை மிக அதிகளவிலான தரவுகளை பயன்படுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தேவையை நிறைவேற்ற அதிகளவிலான சர்வர்களை ஆன்லைனில் எங்கள் குழுவினர் பயன்படுத்த வேண்டியுள்ளது என்றும் இந்த வரம்புகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Elon Musk, Twitter, Twitter New Rules, Tweet Limits, Twitter Limits
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |