ட்விட்டர் பயனர்களின் அடிமடியில் கைவைத்த எலான் மஸ்க்! இன்னும் என்னென்ன செய்வாரோ...
ட்விட்டர் பயனர்களுக்கு வரம்புகளை அமுல்படுத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார் எலான் மஸ்க்.
ட்விட்டரில் பயனர்களுக்கு வரம்பு
ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ட்விட்டர் பயனர்களுக்கு புதிய ஆணையை வெளியிட்டுள்ளார். இதில் அவர் மூன்று புதிய விதிகள் பற்றி கூறியுள்ளார்.
ட்விட்டரில் பயனர்களுக்கு வரம்புகளை அமல்படுத்தியுள்ளனர்.
Reuters
ஒரு நாளில் 300 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும்!
இதில், சரிபார்க்கப்பட்ட பயனர்கள் (Verified accounts) தங்கள் கணக்கிலிருந்து ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் பார்க்க அல்லது படிக்க முடியும்.
அதேசமயம், சரிபார்க்கப்படாத கணக்குகள் (Unverified accounts) தங்கள் கணக்கிலிருந்து 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும்.
அதே நேரத்தில், புதிய சரிபார்க்கப்படாத கணக்குகள் (New unverified accounts) ஒரு நாளில் 300 பதிவுகளை மட்டுமே பார்க்கவும் படிக்கவும் முடியும்.
'டேட்டா ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் கையாளுதலின் தீவிர நிலைகளை நிவர்த்தி செய்ய' வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன என்று மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
Reuters
முன்னதாக வெள்ளிக்கிழமை, ட்வீட்களைப் பார்க்க பயனர்கள் ட்விட்டர் தளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை உரிமையாளர் எலோன் மஸ்க் "தற்காலிக அவசர நடவடிக்கை" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Verified accounts Unverified accounts New unverified accounts, Twitter New Limits, Twitter New Rules, Elon Musk
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |