எலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் ட்விட்டர் வீடியோ ஆப்! என்னனு தெரிஞ்சிக்கோங்க
ஷார்ட் வீடியோ பக்கம் கவனத்தை திரும்பியுள்ள எலான் மஸ்க், ட்விட்டர் வீடியோ ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது பிரத்தியேகமாக பிரத்யேக ஸ்மார்ட் டிவிகளுக்காக ட்விட்டர் அறிமுகப்படுத்தும் வீடியோ ஆப் ஆகும்.
ட்விட்டர் வீடியோ ஆப்- எலான் மஸ்க் அறிவிப்பு
எலான் மஸ்க் ட்விட்டரில் இருந்து ஸ்மார்ட் டிவி மாடல்களுக்காக பிரத்யேக வீடியோ ஆப் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவித்து இருந்தார். ட்விட்டரில் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த மஸ்க் இவ்வாறு கூறினார்.
பயனர் ஒருவர் 'எங்களுக்கு ஸ்மார்ட் டிவி-க்கான பிரத்யேக ட்விட்டர் வீடியோ ஆப் வேண்டும்,' என்று எலான் மஸ்க்-ஐ டேக் செய்தார். இதற்கு பதிலளித்த மஸ்க் 'இதோ வந்து கொண்டு இருக்கிறது,' என பதில் அளித்தார்.
இந்த புதிய ட்விட்டர் வீடியோ ஆப் பற்றி சில விடயங்களை இங்கே அறிந்துகொள்ளலாம்.
- உலகில் இயங்கும் மற்ற நிறுவனங்களை போலவே ட்விட்டர் நிறுவனமும் வீடியோக்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய வீடியோ ஆப் மூலம் ட்விட்டர் நிறுவனம் வீடியோ தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துவதை உணர்த்துகிறது.
- YouTube Shorts, Tik Tok, Instagram Reels போன்ற குறுகிய கால வீடியோ சேவையை ட்விட்டர் நிறுவனமும் விரைவில் அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- வீடியோ பிரிவில் கவனம் செலுத்துவதற்காக எலான் மஸ்க் ட்விட்டரில் அதிக முதலீடுகளை மேற்கொண்டுவருகிறார். சமீபத்தில் தான் Periscope எனும் லைவ் ஸ்டிரீமிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- வீடியோக்களை பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களை ட்விட்டர் வழங்கி வருகிறது.
- அறிமுகமாகவுள்ள இந்த புதிய வீடியோ ஆப் ட்விட்டர் நிறுவனத்திற்கு மட்டுமல்லாது அதன் பயனர்களுக்கும் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் பாரிய அளவில் வருவாய் வாய்ப்புகள் இருக்கும் என நம்பப்படுகிறது.
Twitter Video App, Elon Musk, Smart TV Video App, Twitter, Periscope, Short Videos
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |