96 லட்சம் ரூபாய் ஊதியம் போதாது என கூறிய நபர்: ஒரு வைரல் செய்தி
ஆண்டுக்கு 96 லட்சம் ரூபாய் ஊதியம் போதாது என கூறிய ஒரு நபரைக் குறித்த செய்தி ஒன்று வைரலாகிவருகிறது.
ஆண்டுக்கு 96 லட்சம் ரூபாய் ஊதியம்
பணி வழங்குபவர் ஒருவர், ஆண்டுக்கு 96 லட்சம் ரூபாய் ஊதியம் போதாது என கூறிய பணியாளர் ஒருவரைக் குறித்த செய்தி ஒன்றை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
hurts to reject this one candidate,
— Juned Khatri | Engineer Turned Recruiter 🇮🇳 (@hijunedkhatri) October 8, 2025
he is at 1.3cr and the budget for the role is 96L.
tried talking a mid ground on both ends, didn't work.
பொறியியல் துறைத் தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த ஒருவருக்கு, தான் ஆண்டுக்கு 96 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்க தயாராக இருந்ததாக தெரிவித்துள்ள Khatri என்னும் அந்த பணி வழங்குபவர், ஆனால், அந்த நபர் ஆண்டுக்கு 1.3 கோடி ரூபாய் வேண்டும் என கேட்டதாக தெரிவித்துள்ளார்.
பேச்சுவர்த்தை மூலம் இரண்டுக்கும் இடையில் ஒரு தொகையை முடிவு செய்யலாம் என்றால், அவர் 1.3 கோடி ரூபாய்தான் வேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டதாகவும், ஆகவே, அவரை தான் நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் Khatri.
Khatri சமூக ஊடகம் ஒன்றில் இந்த செய்தியை வெளியிட, என்னது, 1.3 கோடி ரூபாயா என வாயைப் பிளக்கிறார்கள் சிலர்.
எனக்கு வெறும் 40 லட்சம் கொடுங்கள், அந்த வேலையை செய்ய நான் தயார் என்கிறார் ஒருவர்.
எனக்கு அந்த வேலை கிடைக்குமா, அல்லது உங்கள் நிறுவனத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என Khatriயிடம் பலரும் கேட்க, அவரது இடுகை வைரலாகிவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |