ஜேர்மனியின் பிரதான விமான நிலையத்தில் தொழில்நுட்பக்கோளாறு: விமான சேவை பாதிப்பு
ஜேர்மனியின் பிரதான விமான நிலையங்களில் ஒன்றான பிராங்பர்ட் விமான நிலையத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், விமான சேவை பாதிப்புக்குள்ளாகலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
விமான நிலையத்தில் தொழில்நுட்பக்கோளாறு
ஜேர்மனியின் விமான கட்டுப்பாட்டு அமைப்பை இயக்கும் அமைப்பான DFS, நாடுமுழுவதுமுள்ள விமான நிலையங்களில் தொழில்நுட்பக்கோளாறு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும், என்றாலும் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், பிராங்பர்ட் விமான நிலைய செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனால், Dusseldorf விமான நிலையம் உட்பட சில விமான நிலையங்களும் பாதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.
அந்தக் கோளாறு காரணமாக, விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்று காலை 10.00 மணியளவில் இந்த பிரச்சினை உருவானது. ஆனால், தற்போது அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டதாக பிராங்பர்ட் விமான நிலைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |