சில நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்! புத்தாண்டில் அறிமுகமாகும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்
Tecno நிறுவனத்தின் Phantom X2 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் 9ஆம் திகதி விற்பனைக்கு வரும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
அட்டகாசமான டிஸ்ப்ளே
Tecno Phantom X2 5G 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் curved AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
Phantom X2 5G ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது HiOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான டெக்னோ ஸ்மார்ட்போன்.
livehindustan
வீடியோ அழைப்பு
மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
வீடியோ அழைப்பு அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். டெக்னோ Phantom X2 5G ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது.
மேலும் இதை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். ரூ.26,999-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
cnet