பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் மீது மோதிய இ-பைக்: 13 சிறுவன் கைது
பிரித்தானியாவில் கர்ப்பிணிப் பெண் மீது இ-பைக் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்
பிரித்தானியாவில் பூல் நகரில் கர்ப்பிணிப் பெண் மீது இ-பைக் மோதிய சம்பவத்தில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தை தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
என்ன நடந்தது?
ஜனவரி 26ம் திகதி மாலை சுமார் 3.50 மணிக்கு ஹெர்பர்ட் அவென்யூ பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
30 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த இ-பைக் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இ-பைக்கில் வந்த சிறுவன் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உதவாமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு பிரசவம் நடந்தது. அந்த குழந்தை தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வேண்டுகோள்
சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையிலும், பொலிஸார் விபத்து தொடர்பான கூடுதல் விவரங்கள் அல்லது சிசிடிவி காட்சிகள் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |