பெற்றோர், 3 சகோதர சகோதரிகள் மீது துப்பாக்கி சூடு: 15 வயது சிறுவன் கைது
சொந்த பெற்றோர்கள் மற்றும் தன்னுடைய 3 சகோதர, சகோதரிகளை 15 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது சிறுவனின் கொடூரம்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் சீட்டிலின்(Seattle) கிழக்குப் பகுதியில் உள்ள நடந்த சம்பவத்தில் தனது பெற்றோர் மற்றும் 3 சகோதர, சகோதரிகளை சுட்டுக் கொன்றதாக 15 வயது சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்து 11 வயது சகோதரி இறந்தது போல் நடித்து உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.
அண்டை வீட்டுக்காரர் வழங்கிய தகவலின், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.
மேலும் மார்க் ஹுமிஸ்டன் (43), மனைவி சாரா ஹுமிஸ்டன் (42) மற்றும் குழந்தைகள் கதரின் ஹுமிஸ்டன் (7), ஜோஷுவா ஹுமிஸ்டன் (9) மற்றும் பெஞ்சமின் ஹுமிஸ்டன் (13) ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கபட்டனர்.
துப்பாக்கி சூடு தாக்குதலில் இறங்கிய 15 வயது சிறுவன் சமீபத்திய தேர்வில் தோல்வியடைந்தாகவும், அதனால் தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி அனைவரையும் சுட்டதாக உயிர் தப்பிய 11 வயது சிறுமி விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சிறுவன் கைது
பொலிஸார் வழங்கிய அறிக்கையில், சம்பவம் இடத்திற்கு வந்த அதிகாரிகள் 15 வயது சிறுவனை வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கைது செய்தாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் பணியின் போது பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கிங் கவுண்டி குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |