அவுஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பெண்: கொலை வழக்கில் சிறுவன் விடுவிப்பு
அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பறிப்போன உயிர்
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 2 சிறுவர்களில் ஒருவர் மீதான கொலை குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு Boxing தினத்தன்று 41 வயதான எம்மா லவல்(Emma Lovell) என்ற பெண்மணி வீட்டை உடைத்து உள்ளே புகுந்த இரண்டு சிறுவர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றார்.
குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவன்
இந்நிலையில் சந்தேக நபரான மற்றொரு சிறுவன் மீதான விசாரணை நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதியில் அவர் கொலைக்கான தூண்டுதல் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் இந்த சிறுவன் தன்னுடைய கூட்டாளி கத்தி வைத்து இருந்ததை அறிந்து இருந்தானா என்பதற்கான என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் இல்லை என்று நீதிபதி விவரித்து இந்த தீர்ப்பினை வழங்கினார்.
இருப்பினும் எம்மா லவல் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நடத்திய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருக்கான தண்டனை டிசம்பரில் விதிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், சிறுவன் மீதான கொலை குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டதற்கு எம்மா லவலின் கணவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |