அமேசான் நிறுவனர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்: இழப்பீடு கோரி நீதிமன்றம் சென்றார்
அமேசான் நிறுவனர் மீது அவரது முன்னாள் பணியாளர் ஒருவர் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இழப்பீடு கோரி அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் மீது, அவரது வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருவர், தானும் பிற பணியாளர்கள் சிலரும் 14 மணி நேரத்துக்கு இடைவேளையே இல்லாமல் வேலை பார்க்கவைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் Mercedes Wedaa.
அப்படி வேலை பார்க்கும் நேரத்தில், கழிவறைக்குச் செல்லவேண்டுமானால் அதிலும் ஒரு சிக்கல் இருந்ததாக தெரிவித்துள்ளார் Wedaa.
image - New York Post
அதாவது, துணி துவைக்கும் அறையில் அவர்கள் வேலை பார்ப்பார்களாம். அப்போது, அவர்களால் நேரடியாக கழிவறைக்குச் செல்ல முடியாதாம். காரணம், குளியலறைக் கதவைத் திறந்தால், அந்த வழி வீட்டுக்குள் செல்லுமாம். ஆகவே, துணி துவைக்கும் அறையின் ஜன்னல் வழியாக ஏறி குதித்து, ஒரு படிக்கட்டு வழியாக இறங்கித்தான் கழிவறைக்குச் செல்லவேண்டுமாம்.
ஆகவே, அதற்கு வருத்தப்பட்டுக்கொண்டு பெரும்பாலும் சிறுநீர் கூட கழிக்காமலே அந்த பெண்கள் வேலை செய்வார்களாம். அதனால், பலருக்கு சிறுநீர்ப் பாதையில் தொற்று உருவாகிவிடுமாம்.
image - Jeff Bezos. Pic: AP
இதுபோக, அவ்வளவு பெரிய வீட்டில், பணியாளர்களுக்கு ஓய்வெடுக்க இடம் கிடையாது, சில நேரங்களில் துணி துவைக்கும் அறையில்தான் சாப்பிடவேண்டியிருக்கும், இனப்பாகுபாடும் உண்டு என பல புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தான் இதுகுறித்து புகார் தெரிவித்தபோது, தான் பதவியிறக்கம் செய்யப்பட்டதாகவும், அநியாயமாக பதவிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறி இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் Wedaa.