பற்றியெரியும் பிரான்ஸ்... அந்த ஒருவர் தான் முழு பொறுப்பு: கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் வெளிப்படை
ரக்பி விளையாட்டு வீரரும் சிறுபான்மை இனத்தவருமான 17 வயது இளைஞர் பொலிஸ் வன்முறைக்கு பலியானது, தற்போது பிரான்ஸ் முழுவதும் பற்றியெரியும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
பல்வேறு மாகாணங்களில்
கடந்த செவ்வாய்க்கிழமை சாலையில் தடுத்து நிறுத்தப்பட்ட இளைஞர் நஹெல் பொலிஸ் ஒருவரால் மார்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தற்போது பிரான்ஸின் பல்வேறு மாகாணங்களில் பெரும் கலவரத்தை தூண்டியுள்ளது.
@afp
திரளான பொலிசார் களமிறக்கப்பட்டும், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. தலைநகர் பாரிஸ் அருகாமையில் Nanterre பகுதியில் குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
முன்னாள் பிரெஞ்சு காலனியான அல்ஜீரியாவை சேர்ந்த குடும்பம் இவர்கள். ஆனால் நஹெலின் இனப் பின்னணி குறித்து அதிகாரிகள் தரப்பு எந்த கருத்தையும் குறிப்பிடாமல் அமைதிக் காத்தனர்.
@AP
எனக்கான ஒரே சொத்தையும்
இருப்பினும், பிரான்ஸ் கால்பந்து உச்ச நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே மற்றும் நடிகர் Omar Sy ஆகியோர் உடனடியாக தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளதுடன், ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
@reuters
நஹெலின் தாயார் மௌனியா தெரிவிக்கையில், எனது ஒரே ஒரு மகனை, நெருங்கிய நண்பனை, எனக்கான ஒரே சொத்தையும் இழந்து நிர்க்கிறேன் என்றார்.
நாட்டின் தற்போதை நிலைக்கு ஒரே ஒருவர் தான் காரணம் என குறிப்பிட்டுள்ள அவர், எனது மகனின் உயிரைப் பறித்த அந்த நபர் தான் முழு பொறுப்பு என்றார்.
@rex
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |