உலகக் கிண்ண வெற்றிக் கொண்டாட்டங்கள்: இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
ஃபிஃபா உலகக் கிண்ணம் முதல் காலிறுதிப் போட்டியில் மொராக்கோ அணியை எதிர்கொண்ட பிரான்ஸ், வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
இந்நிலையில், பிரான்சில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டங்கள் இளம்பெண் ஒருவரின் உயிரைப் பறித்துவிட்ட துயரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
அமெரிக்காவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணம் முதல் காலிறுதிப் போட்டியில் மொராக்கோ அணியை எதிர்கொண்ட பிரான்ஸ், 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்து, அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

பிரான்சின் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
பிரெஞ்சு நகரமான Maubeugeஇல், வரிசையாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்க, ட்ரக் ஒன்றில் நின்றுகொண்டிருந்த 17 வயது இளம்பெண்ணொருவர் எதிர்பாராதவிதமாக வாகனத்திலிருந்து கீழே விழ, பின்னால் வந்த வாகனம் அவர் மீது ஏறியிறங்க, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டார் அவர்.
இந்தக் காட்சியைக் கண்ட இளம்பெண்ணொருவர் அதிர்ச்சிக்குள்ளாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிர் பலி வாங்கிய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |