அன்று பெற்றோரின் பிடியில் கொடூர சித்திரவதை... இன்று அடையாளம் தெரியாமல் மொத்தமாக மாறிப்போன இளம்பெண்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொடூர பெற்றோரின் சித்திரவதையில் இருந்து தப்பிய இளம்பெண், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அடையாளம் தெரியாத வகையில் மொத்தமாக மாறிப்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடூரமான பெற்றோரின் பிடியில்
டெக்சாஸ் மாகாணத்தில் கொடூரமான பெற்றோரின் பிடியில் இருந்து தப்பிக்கும் போது ஜோர்டான் டர்பினுக்கு 17 வயது. அந்த குடியிருப்பில் வெளியேறிய ஜோர்டான் பொலிசாருக்கு தகவல் அளிக்க, உடனடியாக செயலில் இறங்கிய பொலிசார், மொத்தமாக 13 சிறார்களை மீட்டுள்ளனர்.
instagram
பெற்றோரால் தாம் எதிர்கொண்ட சித்திரவதை மற்றும் கொடூரத்தை நினைவு கூர்ந்துள்ள ஜோர்டான், மூச்சு முட்டும் அளவுக்கு அந்த குடியிருப்பு துர்வாடையுடன் இருந்தது என்றார்.
தற்போது வாழ்க்கையே மொத்தமாக மாறியதுடன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அவர் எல்லே பத்திரிக்கைக்கு மொடலிங் செய்துள்ளார். மட்டுமின்றி சமூக ஊடகத்தில் மில்லியன் ஆதரவாளர்களுடன் பிரபலமாகவும் உள்ளார்.
ஆனால் அவரது கேவலமான பெற்றோர் சித்திரவதைகள், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறை வைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் வாடுகின்றனர்.
Image: mirror.co.uk
2043 வரையில் அவர்களுக்கு பரோல் அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெந்தகோஸ்தே கிறிஸ்தவர்களான டேவிட் மற்றும் லூயிஸ் டர்பின் தம்பதி, கடவுளின் விருப்பம் என்று கூறி மொத்தம் 13 பிள்ளைகளை பெற்றுள்ளனர்.
பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளனர்
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வேளை மட்டுமே உணவளித்துள்ளனர். தமது பிள்ளைகளை கொட்டுரமாக தாக்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் டேவிட். மட்டுமின்றி, தமது பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே அனுப்பவும் டேவிட் லூயிஸ் தம்பதி மறுத்துள்ளது.
ஜோர்டானின் தாயாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமானவர் தான், ஜஸ்டின் பீபர் பாடலை தனது அலைபேசியில் ரகசியமாகப் பார்த்ததற்காக அவர் ஒருமுறை தனது மகளை கழுத்தை நெரித்தார்.
Instagram
இந்த கொடூரங்களில் இருந்து விடுபட விரும்பிய ஜோர்டான் துணிந்து ஜன்னல் வழியாக தப்பித்து, பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார். பொலிசாரால் மீட்கப்பட்ட பின்னர் ஜோர்டான் மற்றும் அவரது ஐந்து சகோதரர்களை காப்பகம் ஒன்றில் ஒப்படைக்க, அங்கேயும் துஸ்பிரயோகத்திற்கு மறுபடியும் இலக்காக நேர்ந்ததை ஜோர்டான் வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது ஜோர்டான் மட்டுமின்றி, அவரது சகோதரர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளனர். அடிக்கடி தாங்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்துக் கொள்வதாகவும் ஜோர்டான் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |