மாயமான இளம்பெண்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் 17 வயதுப் பெண்ணொருவர் மாயமான நிலையில், மாந்தோப்பு ஒன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸ் விசாரணையில், அதிர்ச்சியை உருவாக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாயமான இளம்பெண்
உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட் நகரில் வாழ்ந்துவந்த 17 வயதுப் பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை இரவு மாயமானதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

மறுநாள், அதாவது, சனிக்கிழமை, மாந்தோப்பு ஒன்றில் அந்த இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்
பொலிசார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை சந்தேக வளையத்துக்குள் கொண்டுவர, அந்த இளம்பெண்ணின் தாய்மாமனான சர்த்தாஜ் என்பவர், தானும் பிள்ளையின் சித்தியும் சேர்ந்து அவளைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணையின்போது, அந்த இளம்பெண் எப்போது பார்த்தாலும் மொபைலில் பேசிக்கொண்டிருந்ததாகவும், ஒன்லைனில் சாட் செய்துகொண்டே இருந்ததாகவும், அதனால் அவள் யாருடனோ தொடர்பிலிருப்பதாக தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சர்த்தாஜ்.
அந்த சந்தேகத்தை நிரூபிப்பது போல, இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடியுள்ளார் அந்த இளம்பெண்.
எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அந்த இளம்பெண் கேட்காததால் ஆத்திரமடைந்த சர்த்தாஜும் அந்த இளம்பெண்ணின் சித்தியும் சேர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு, அவளது பெற்றோர், உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில் அவளைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார் சர்த்தாஜ்.
பின்னர் அதிகாலை 3.00 மணிக்கு அவளது உடலைக் கொண்டுபோய் ஒரு மாந்தோப்பில் மறைத்துவைத்துவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் சர்த்தாஜ்.
அதைத் தொடர்ந்து, சர்த்தாஜும் அந்த இளம்பெண்ணின் சித்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |