பெண்ணாக மாற விரும்பிய மகன்; எதிர்ப்பு தெரிவித்த தாய்க்கு நேர்ந்த விபரீதம்
lucknow teen kills mother for oppose gender affirmings urgery: அறுவை சிகிச்சை மூலம் மகன் பெண்ணாக மாற மகன் விரும்பிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மகன் அடித்து கொன்றுள்ளார்.
பெண்ணாக மாற விரும்பிய மகன்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஜவுளித் தொழிலதிபரின் மகன் தனது 12 வயதிற்கு பின்னர், உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பெண்கள் அணியும் ஆடைகளை அணிவதில் விருப்பம் காட்டியுள்ளார்.

அதன் பிறகு பெண்ணாக அவர் உணர்ந்து வாழ தொடங்கிய நிலையில், சில மாதங்களுக்கு குடும்பத்தினருடன் முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அவரின் செலவுக்கு பெற்றோர் மாத மாதம் பணம் வழங்கி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 1 ஆம் திகதி அந்த 17 வயது சிறுவன் தனது தாயை சந்திக்க வீட்டிற்கு வந்துள்ளான்.
அப்போது தான் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாற உள்ளதாக தெரிவித்துள்ளான்.
எதிர்ப்பு தெரிவித்த தாய்
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், அறுவை சிகிச்சை வேண்டாம் எனவும், மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தான் கையில் வைத்திருந்த இரும்பு Wrinch மூலம் தாயின் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் அந்த தாய் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓடாமல் தனது தந்தை மற்றும் காவல்துறையை அழைத்து தகவல் தெரிவித்துள்ளான்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், அந்த சிறுவன் ChatGPT செயலில், கொலைக்கு பின்னர் காவல்துறை எப்படி விசாரிக்கும் என்ன தண்டனை கிடைக்கும் போன்ற தகவல்களை தேடியுள்ளது தெரிய வந்துள்ளது.
அந்த சிறுவன் கைது செய்யப்பட்ட போதிலும், உளவியல் நிபுணர்களும் மருத்துவப் பணியாளர்களும் அந்தச் சிறுவனுக்கு ஆலோசனை வழங்குவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.