பிரித்தானியாவில் சொந்த மகனால் தந்தைக்கு நேர்ந்த துயரம்... காயங்களுடன் தப்பிய இருவர்
பிரித்தானியாவில் கத்தியால் தாக்கி சொந்த தந்தையை கொலை செய்த இளைஞரின் விலங்கிடப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கொலை வழக்கு
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 11 வயது சிறுவனும் பெண் ஒருவரும் காயங்களுடன் தப்பியதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரைட்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 57 வயதான எமாத் சமீர் போட்ரோஸை ஃபேபியோ போட்ரோஸ் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்பிடைய 19 வயது இளைஞர் விசாரணைக்காக லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை பகல் நடந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து போட்ரோஸ் மீது கொலை மற்றும் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
பொலிசாருக்கு தகவல்
மூன்று படுக்கையறைகள் கொண்ட அந்த குடியிருப்பிலிருந்து உரத்த அலறல் மற்றும் கூச்சல் சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது 11 வயது சிறுவன் அப்பகுதி மக்களை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க கெஞ்சியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எமாத் தலையில் பலட்த காயங்களுடன் மீட்கப்பட, சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த குடியிருப்பில் இருந்து 57 வயது பெண்மணி ஒருவரும் 11 வயது சிறுவனும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |