தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்குள் அத்துமீறிய சுற்றுலாப்பயணி: கிடைக்கவிருக்கும் தண்டனை

Andaman and Nicobar Islands
By Arbin Apr 04, 2025 10:41 AM GMT
Report

இந்தியாவின் தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுப்பகுதிக்குள் அத்துமீறிய அமெரிக்க சுற்றுலாப்பயணிக்கு 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 5 ஆண்டுகள் வரையில்

இதுவரை வெளியுலகமே அறிந்திராத பூர்வகுடி மக்கள் வாழும் அந்தமான் பகுதியிலேயே 24 வயதான உக்ரைன் வம்சாவளி அமெரிக்க சுற்றுலாப்பயணி Mykhailo Viktorovych Polyakov அத்துமீறியுள்ளார்.

தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்குள் அத்துமீறிய சுற்றுலாப்பயணி: கிடைக்கவிருக்கும் தண்டனை | Tourist Who Risked Tribe Faces Jail

தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் பகுதிக்கே சனிக்கிழமை காலை ஒரு தேங்காய் மற்றும் டயட் கோக் டப்பாவை எடுத்துச் சென்றுள்ளார். அரிசோனாவைச் சேர்ந்த பாலியாகோவ், திங்கள்கிழமை மாலையில் கைது செய்யப்பட்டார்.

உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் விசாரணைக்காக மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து பொலிசார் ஒரு GoPro கமெராவை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் பகுதியில் அத்துமீறியுள்ளதால், 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கலாம் என்றே கூறப்படுகிறது.

ட்ரம்பின் 26 சதவீத வரி விதிப்பால்... இந்தியா எவ்வளவு இழப்பை எதிர்கொள்ள நேரிடும்

ட்ரம்பின் 26 சதவீத வரி விதிப்பால்... இந்தியா எவ்வளவு இழப்பை எதிர்கொள்ள நேரிடும்

மட்டுமின்றி, சென்டினல் தீவுக்குள் நுழைய முயற்சித்தவர்களுக்கு உதவிய எந்தவொரு உள்ளூர்வாசிகளையும் இந்திய அதிகாரிகள் தண்டித்துள்ளனர். தற்போது பாலியாகோவ் விவகாரத்திலும் உள்ளூர் மக்கள் உதவியுள்ளார்களா என விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்வ மிகுதியால் வடக்கு சென்டினல் பகுதிக்கு புறப்பட்டதாகவே பாலியாகோவ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் காணொளி ஒன்றை பதிவு செய்து தமது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்குள் அத்துமீறிய சுற்றுலாப்பயணி: கிடைக்கவிருக்கும் தண்டனை | Tourist Who Risked Tribe Faces Jail

பாலியாகோவ் மார்ச் 26 அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேருக்கு சென்றுள்ளார். மார்ச் 28ம் திகதி அதிகாரிகளுக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் படகு ஒன்றில் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் பகுதிக்கு சென்றுள்ளார்.

55,000 ஆண்டுகளாக

அங்கிருந்து அடுத்த நாள் பகல் கரைக்கு திரும்பியுள்ளார். வடக்கு சென்டினல் பகுதியில் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே அவர் செலவிட்டுள்ளார். மதியம் 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 7 மணிக்கு கூர்மா தேரா கடற்கரையை அடைந்துள்ளார்.

தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்குள் அத்துமீறிய சுற்றுலாப்பயணி: கிடைக்கவிருக்கும் தண்டனை | Tourist Who Risked Tribe Faces Jail

உள்ளூர் மீனவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இரண்டு நாட்களுக்கு பிறகு பாலியாகோவ் கைதாகியுள்ளார். சுமார் 150 பேர்கள் மட்டுமே வசிக்கும் வடக்கு சென்டினல் தீவில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில், இந்திய கடற்படை கூட அங்கு நுழைய அனுமதிக்கப்படவில்லை.

சென்டினல் பூர்வகுடி மக்களுடன் எந்த தொடர்பும் வைத்திருப்பது சட்டவிரோதமானது, மேலும் அந்தமான் பூர்வகுடி மக்களைப் புகைப்படம் எடுப்பதோ அல்லது வீடியோ எடுப்பதோ கூட மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்குள் அத்துமீறிய சுற்றுலாப்பயணி: கிடைக்கவிருக்கும் தண்டனை | Tourist Who Risked Tribe Faces Jail

சென்டினல் மக்கள் 55,000 ஆண்டுகளாக காடுகள் நிறைந்த சிறிய தீவில் வெளியுலகத் தொடர்பேதும் இல்லாமல் வசித்து வருகின்றனர். அந்தமான் தீவுகளில் 400 பேர் கொண்ட ஜராவா பூர்வகுடி மக்களும் வசிக்கின்றனர், அவர்கள் வெளியாட்களின் தொடர்புகளாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US