பிஞ்சு குழந்தைக்கு பால்பவுடரில் போதை மருந்து கலந்து தந்த பதின்ம வயது தாய்: பறிபோன உயிர்
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இள வயது தாய் ஒருவர் தனது பிஞ்சு குழந்தைக்கு பால் பவுடருடன் போதை மருந்தை கலந்துக் கொடுத்ததால் அந்தக் குழந்தை மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பேச்சுமூச்சு இல்லாமல்
குறித்த இள வயது தாயாருக்கு 17 வயது என்பதால் அவரின் அடையாளங்களை வெளியிடாத அதிகாரிகள் தரப்பு நடந்த சம்பவத்தை மட்டும் பகிர்ந்து கொண்டுள்ளது.
Credit: First Coast News
கடந்த ஜூன் மாதம் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. காலஹான் பகுதியில் குடியிருந்த அந்த இளம் தாயாரின் குடியிருப்புக்கு பொலிசார் வழக்கமான விசாரணைக்காக சென்றுள்ளனர்.
அப்போது குழந்தை பேச்சுமூச்சு இல்லாமல் இருந்துள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றுள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட உடற்கூறு ஆய்வில் குழந்தையின் உடலில் ஃபென்டானில் என்று போதை மருந்து இருந்தது தெரியவந்தது. அது குறித்து மருத்துவ அறிக்கையில், குழந்தையின் உடலில் 10 பெரியவர்களைக் கொல்லும் அளவிலான பென்டானில் இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த 17 வயது தாயாரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதலில் அவர் அது தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார். அடுத்தடுத்த விசாரணைகளில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
பாலுடன் கொஞ்சம் போதைப் பொருள்
9 மாதமேயான குழந்தையை தன்னால் பராமரிக்க இயலவில்லை என்றும் அதனால் குழந்தைக்கு பாலுடன் கொஞ்சம் போதைப் பொருள் கலந்ததாகவும் குழந்தை தூங்கினால் தானும் சிறிது நேரம் தூங்க இயலும் என்பதால் அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.
Credit: First Coast News
மட்டுமின்றி, உயிர் கொல்லும் ஃபென்டானில் என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இளம் தாயார் மீது கொலை மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த குற்றங்களுக்கான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே குறித்த தாயாரை கைது செய்தபோது அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரிகளிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |