இந்திய குடும்பத்தில் 6 பேர் மரணத்திற்கு காரணமான டெக்சாஸ் இளைஞர்: வெளியான தீர்ப்பு

Accident Indian Origin Texas
By Arbin Nov 08, 2025 10:37 AM GMT
Report

டெக்சாஸில் பயங்கரமான சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்களின் மரணத்திற்கு காரணமான இளைஞருக்கு 65 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பம்

டெக்சாஸ் இளைஞரான 19 வயது Luke Garrett Resecker என்பவரே, சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறக்கு சிறையில் அடைக்கப்பட்டவர்.

இந்திய குடும்பத்தில் 6 பேர் மரணத்திற்கு காரணமான டெக்சாஸ் இளைஞர்: வெளியான தீர்ப்பு | Teen Sentenced Killed Indian Family

இந்தியாவைச் சேர்ந்த 6 பேர்கள் மரணத்திற்கு காரணமான அந்த விபத்திற்கு அவரது கட்டுப்பாடற்ற பயணம் மற்றும் போதைப் பொருளுக்கு உட்பட்டிருந்ததும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

சம்பவத்தன்று டெக்சாஸின் கிளெபர்ன் அருகே ஒரு பிரதான சாலையில் ரெசெக்கர் இரட்டை மஞ்சள் கோட்டை வேகமாகக் கடந்தார். அப்போது அவரது வாகனமானது ஏழு பேரை ஏற்றிச் சென்ற மினிவேனில் பலமாக மோதியது.

சீனாவும் அமெரிக்காவும் மல்லுக்கட்ட... அரிய மண் தாதுக்களால் கோடிகளை சம்பாதிக்கும் பெண்

சீனாவும் அமெரிக்காவும் மல்லுக்கட்ட... அரிய மண் தாதுக்களால் கோடிகளை சம்பாதிக்கும் பெண்

கடந்த 2023 டிசம்பர் 26 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உடனடியாகக் கொல்லப்பட்டனர், ஏழாவது குடும்ப உறுப்பினர் இடுப்பிலிருந்து கீழே செயலிழந்தார்.

விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள், 28 வயது ருஷில் பாரி, 39 வயது நவீனா போடபதுலா, 64 வயது நாகேஸ்வரராவ் பொன்னாடா, 60 வயது சீதாமஹாலட்சுமி பொன்னடா, 10 வயது கிருத்திக் போடபதுலா, மற்றும் 9 வயது நிஷிதா போடபதுலா ஆகியோரே.

இந்திய குடும்பத்தில் 6 பேர் மரணத்திற்கு காரணமான டெக்சாஸ் இளைஞர்: வெளியான தீர்ப்பு | Teen Sentenced Killed Indian Family

அந்தக் குடும்பமானது, விடுமுறைச் சுற்றுலாவில் ரிம் வனவிலங்கு மையத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தது. அந்த விபத்தில் உயிர் தப்பிய 43 வயது லோகேஷ் போடபதுலா தமது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களை இழந்தார்.

சிரித்த முகம்

விபத்தை அடுத்து பொலிசார் முன்னெடுத்த சோதனையில், ரெசெக்கரின் பிக்அப் லொறியில் கஞ்சா மெழுகு, ஒரு வேப் பேனா மற்றும் பயன்படுத்தப்பட்ட கஞ்சா ஆகியவை சிதறிக்கிடந்தன.

இந்திய குடும்பத்தில் 6 பேர் மரணத்திற்கு காரணமான டெக்சாஸ் இளைஞர்: வெளியான தீர்ப்பு | Teen Sentenced Killed Indian Family

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரெசெக்கர் முதன்முதலில் கைது செய்யப்பட்டபோது, ​​அவரது சிரித்த முகத்துடன் வெளியான புகைப்படம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை கோபப்படுத்தியது மற்றும் பொதுமக்களை திகைக்க வைத்தது.

இந்த வழக்கில் ஒரு வார சாட்சியத்திற்குப் பிறகு, நடுவர் மன்றம் ஒரு முடிவை எட்ட சில மணிநேரங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டது. டெக்சாஸ் குற்றவியல் நீதிமன்றத்தால் ரெசெக்கருக்கு 65 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்திய குடும்பத்தில் 6 பேர் மரணத்திற்கு காரணமான டெக்சாஸ் இளைஞர்: வெளியான தீர்ப்பு | Teen Sentenced Killed Indian Family

அந்தக் குடும்பமானது டெக்சாஸின் பிளானோவிலிருந்து ஜார்ஜியாவின் அல்பரெட்டாவிற்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காகக் குடிபெயர்ந்தது. விபத்தில் ரெசெக்கரும் மோசமாக காயமடைந்த நிலையிலேயே மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US