இந்திய குடும்பத்தில் 6 பேர் மரணத்திற்கு காரணமான டெக்சாஸ் இளைஞர்: வெளியான தீர்ப்பு
டெக்சாஸில் பயங்கரமான சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்களின் மரணத்திற்கு காரணமான இளைஞருக்கு 65 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பம்
டெக்சாஸ் இளைஞரான 19 வயது Luke Garrett Resecker என்பவரே, சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறக்கு சிறையில் அடைக்கப்பட்டவர்.

இந்தியாவைச் சேர்ந்த 6 பேர்கள் மரணத்திற்கு காரணமான அந்த விபத்திற்கு அவரது கட்டுப்பாடற்ற பயணம் மற்றும் போதைப் பொருளுக்கு உட்பட்டிருந்ததும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
சம்பவத்தன்று டெக்சாஸின் கிளெபர்ன் அருகே ஒரு பிரதான சாலையில் ரெசெக்கர் இரட்டை மஞ்சள் கோட்டை வேகமாகக் கடந்தார். அப்போது அவரது வாகனமானது ஏழு பேரை ஏற்றிச் சென்ற மினிவேனில் பலமாக மோதியது.
கடந்த 2023 டிசம்பர் 26 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உடனடியாகக் கொல்லப்பட்டனர், ஏழாவது குடும்ப உறுப்பினர் இடுப்பிலிருந்து கீழே செயலிழந்தார்.
விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள், 28 வயது ருஷில் பாரி, 39 வயது நவீனா போடபதுலா, 64 வயது நாகேஸ்வரராவ் பொன்னாடா, 60 வயது சீதாமஹாலட்சுமி பொன்னடா, 10 வயது கிருத்திக் போடபதுலா, மற்றும் 9 வயது நிஷிதா போடபதுலா ஆகியோரே.

அந்தக் குடும்பமானது, விடுமுறைச் சுற்றுலாவில் ரிம் வனவிலங்கு மையத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தது. அந்த விபத்தில் உயிர் தப்பிய 43 வயது லோகேஷ் போடபதுலா தமது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களை இழந்தார்.
சிரித்த முகம்
விபத்தை அடுத்து பொலிசார் முன்னெடுத்த சோதனையில், ரெசெக்கரின் பிக்அப் லொறியில் கஞ்சா மெழுகு, ஒரு வேப் பேனா மற்றும் பயன்படுத்தப்பட்ட கஞ்சா ஆகியவை சிதறிக்கிடந்தன.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரெசெக்கர் முதன்முதலில் கைது செய்யப்பட்டபோது, அவரது சிரித்த முகத்துடன் வெளியான புகைப்படம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை கோபப்படுத்தியது மற்றும் பொதுமக்களை திகைக்க வைத்தது.
இந்த வழக்கில் ஒரு வார சாட்சியத்திற்குப் பிறகு, நடுவர் மன்றம் ஒரு முடிவை எட்ட சில மணிநேரங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டது. டெக்சாஸ் குற்றவியல் நீதிமன்றத்தால் ரெசெக்கருக்கு 65 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தக் குடும்பமானது டெக்சாஸின் பிளானோவிலிருந்து ஜார்ஜியாவின் அல்பரெட்டாவிற்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காகக் குடிபெயர்ந்தது. விபத்தில் ரெசெக்கரும் மோசமாக காயமடைந்த நிலையிலேயே மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |