லண்டனில் 17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: 3 சிறுவர்களை கைது செய்த பொலிஸார்
லண்டனில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து
லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள பேட்டர்சீ(Battersea) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக இரண்டு 15 வயது மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்கள் கொலை சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு உயிரிழந்த சிறுவன் 17 வயது ஜமால் கூம்ப்ஸ்(Jamal Coombes) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
Glycena சாலையில் சனிக்கிழமை அதிகாலை காயங்களுடன் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் ஜமால் கூம்ப்ஸ் சம்பட இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடையே அச்சம் பரவியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த வாரம் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என தலைமை துப்பறியும் ஆய்வாளர் பிரையன் ஹோவி அறிவித்துள்ளார்.
கொலை சற்று முன்னதாக அதில் ஈடுபட்டவர்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |