சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை: வெளிநடப்பு செய்த ஈரானிய பிரதிநிதிகள்: என்ன நடந்தது?
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் போது ஈரான் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் 14 அம்ச திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் பர்ஜென்ஸ்டாக் நகரில் நேற்று தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்த முயற்சிகளின் மூலம் இந்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

அமெரிக்காவின் சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், மற்றும் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரான் சார்பில் அந்நாட்டின் சபாநாயகர் பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் கத்தார் பிரதமரும் நேரில் கலந்து கொண்டனர்.
வெளியேறிய ஈரானிய பிரதிநிதிகள்
இந்நிலையில், ஈரானால் பணம் கொடுத்து இயக்கப்படும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரை கட்டுப்படுத்தாவிட்டால் ஈரான் மீது மீண்டும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனை கண்டித்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஈரானிய பிரதிநிதிகள் வெளியேறியதாக ஈரானிய செய்தி ஊடகமான IRNA செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும், அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பதிலளிக்க எங்கள் நாட்டின் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா சொல்வதை, நாங்கள் செயலில் காட்டுபவர்கள் என்று டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரானிய அதிகாரிகளில் முதலில் வெளிநடப்பு செய்தாலும், பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியதாக அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |