நிர்வாண வீடியோ கால் மூலம் இளம்பெண் மிரட்டல்! ரூ. 1.14 கோடி பணமோசடி
நிர்வாண வீடியோ கால் அழைப்பு மூலம் ஊழியர் ஒருவரை மிரட்டி ரூ. 1.14 கோடி பணமோசடி செய்துள்ள இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ கால் மூலம் அழைப்பு
இந்திய மாநிலம் கார்நாடகாவின் பெங்களூரு கே.ஆர் புரத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் பிரிட்டனில் தொழில்நுட்பத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், திருமணம் செய்வதற்காகவும், தன்னுடைய பயிற்சிக்காகவும் பெங்களூரு வந்திருந்தார்.
அப்போது, திருமணம் செய்ய பெண் தேடுவதற்காக பிரபல மேட்ரிமோனியல் இணையதளத்தில் தன்னுடைய சுய விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதனை, பலரும் பார்க்கும்படி அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இந்த விவரங்களை பயன்படுத்திக் கொண்ட இளம்பெண் அவருடன் தொடர்பு ஏற்படுத்தி போன் நம்பர் வாங்கியுள்ளார். பின்பு, இருவரும் போன் மூலம் பழகியுள்ளனர்.
அப்போது, தனது தந்தை இறந்து விட்டதாகவும், தனது தாயாருக்கு 1500 ரூபாய் வேண்டும் என்று அந்த பெண் கேட்டுள்ளார். பின்பு, தொழிநுட்பத்துறை ஊழியர் உதவியை செய்ய ஜூலை 4 ஆம் திகதி வீடியோ கால் மூலம் வந்துள்ளார்.
அந்த சமயத்தில் அந்த நபருக்கே தெரியாமல் நிர்வாண முறையில் வீடியோ கால் பேசியதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இளம்பெண் கைது
இதனையடுத்து, போன் பழக்கத்தின் போது ஊழியரின் பலவீனத்தை தெரிந்து கொண்ட இளம்பெண் பணமோசடி செய்ய முடிவு செய்துள்ளார்.
பின்னர், நிர்வாணமாய் வீடியோ கால் பேசியதை பெற்றோரிடம் கூறி விடுவதாக சொல்லி பணம் கேட்டு இளம்பெண் மிரட்டியுள்ளார்.
உடனே அந்த ஊழியர், பெண் கூறிய 4 வங்கிக் கணக்கில் 1.14 கோடி ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனாலும், அந்த பெண் தொடர்ந்து மிரட்டுவதை நிறுத்தவில்லை. இதனால், அந்த ஊழியர் வேறு எந்தவொரு வழியும் இல்லாமல் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விசாரணையை தொடங்கிய பொலிசார் நீண்ட நாள்களுக்கு பிறகு பண மோசடி செய்த இளம்பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 84 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |