வீடியோ கால் செய்து என் அப்பா, அம்மா அழுதுட்டாருங்க: மனம் திறந்த திலக் வர்மா
ஒவ்வொரு நாளும் நான் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என கனவு காண்பேன் என்று கிரிக்கெட் வீரர் திலக் வர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.
புகழாரம் சூட்டிய ரோஹித் சர்மா
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா ஒரு வீரரை பற்றி பெருமையாக பேசினார். அவர் சில நாட்களில் வேறு ஒரு ஜெர்சியை வாங்கிப் போடப்போகிறார். அதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என்று கூறியிருந்தார்.
அவர் வேறு யாரும் இல்லை திலக் வர்மா தான். அவர் சொன்ன மாதிரியே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியில் திலக் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ஸ்ட்ரைக் ரேட் 164ஆக பதிவு செய்துள்ளார்.
மனம் திறந்த திலக் வர்மா
இது தொடர்பாக திலக் வர்மா பேசுகையில், என்னை இந்திய அணியில் தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால், நான் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டேன்.
நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அறிந்த என் அம்மா, அப்பா வீடியோ கால் செய்து கண்ணீருடன் வாழ்த்து தெரிவித்து பேசினர். அப்போது நானும் உணர்ச்சிவசப்பட்டுவேன்.
நான் ஐபிஎல் தொடரில் விளையாடியபோது கிரிக்கெட் ஜாம்பவான் ரோஹிர் சர்மா, சச்சின், விராட் கோலி ஆகியோர் கிரிக்கெட் சம்பந்தமாக எனக்கு நிறைய ஆலோசனைகள் கூறியுள்ளனர்.
நான் தூங்கும்போது தினமும் உலகக்கோப்பைத் தொடரில் மைதானத்தில் இறங்கி துடுப்பாட்டம் செய்தால் எப்படி இருக்கும் என்று ஆசையாக கனவு காண்பேன்.
நான் சின்ன வயதிலிருந்தே என் கனவு என்றால் அது ஒன்று மட்டும்தான். உலகக்கோப்பையில் இந்திய அணி வெல்ல வேண்டும். அதுதான் என் ஆசை, என் இலட்சியம், என் கனவு என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |