இளைஞர் ஒருவர் தாயாரிடம் சொன்ன அந்த விடயம்... அதன் பின்னர் நடந்த கோர சம்பவம்
ஸ்பெயினில் கத்தியால் மூவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.
தமது தாயாரிடம்
மாட்ரிட் நகரில் நடந்த இச்சம்பவத்தில் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த அந்த 18 வயது இளைஞர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.

மூவரை கத்தியால் தாக்கிவிட்டு, கைது நடவடிக்கையின் போது முரட்டுத்தனமாக நடந்துகொண்டதை அடுத்தே பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகல் நடந்த சம்பவங்களை சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய பயங்கரவாத குற்றங்களாக குறிப்பிட்டு ஸ்பெயினின் மத்திய குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விசாரித்து வருகிறார்.
மாட்ரிட்டின் கிரிகோரியோ மரனான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞர், கிறிஸ்தவர்களைக் கொல்வதே நோக்கமாக உள்ளது என்றும், அதனால் மட்டுமே தன்னை சுத்திகரித்துக் கொள்ள முடியும் என்றும் தமது தாயாரிடம் கூறியதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த நபர், சம்பவத்தின் போது கேப்டகோ என்ற செயற்கை போதைப்பொருளை உட்கொண்டாரா என்பது தொடர்பிலும் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குர்ஆனிலிருந்து
தொடர்புடைய போதைப்பொருளானது சிரியாவில் ஐ.எஸ் குழுவினரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாட்ரிட் நகரின் Puente de Vallecas பகுதியில் இருந்தே பொலிசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
பொலிசாரையும் அந்த இளைஞர் தாக்க முயன்றதுடன், கைது செய்யும் போது அவர் குர்ஆனிலிருந்து வசனங்களை ஓதியதாகவும் கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், ஒரு வயதான பெண் உட்பட மூன்று பேரை ஒரு நபர் கத்தியால் குத்தியதாக பொலிசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

சில மணி நேரம் கழித்து, சந்தேக நபரின் சகோதரர் பொலிஸாரை அழைத்து, அவர் ஒரு பெரிய கத்தியுடன் தனது வீட்டிற்குள் பதுங்கியிருப்பதாகவும், மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்ததாக விசாரணையில் அறியப்படுகிறது. தாக்குதலுக்கு இரையான மூவரும் சிகிச்சையில் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |