பிரித்தானியாவில் காணாமல்போன 15 வயது சிறுவன்..ஒரு வாரத்தில் சடலமாக மீட்பு
பிரித்தானியாவின் Gainsborough நதியில் காணாமல்போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது.
பதின்பருவ சிறுவன் மாயம்
கடந்த 22ஆம் திகதி ஒலிவியர் கஸ்மரோவ்ஸ்கா என்ற 15 வயது சிறுவன், தி ஃப்ளோர் சாலை பாலத்தின் அருகேயுள்ள நதிக்கரை அருகே காணாமல் போனார்.
இதுகுறித்து புகாரை பெற்ற லிங்கன்ஷையர் பொலிஸார் தேடுதல் பணியில் இறங்கினர். நீருக்கடியில் தேடுதல் குழுக்கள் மற்றும் பொலிஸ் டிரோன் போன்ற முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
சடலமாக மீட்பு
இந்த நிலையில் Gainsborough உள்ள நதியில் ஒலிவியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸார் அவரது சடலம் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
மேலும், ஒலிவியரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், மரணத்தின் சூழ்நிலையை விசாரிப்பதற்கான கோப்பு இப்போது மரண விசாரணை அதிகாரிக்கு தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
ITV/Lincolnshire Police
மாணவனின் மரணம் குறித்து லிங்கன்ஷையர் பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'முறையான அடையாளத்தைத் தொடர்ந்து, நேற்று (மே 26) நதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 15 வயதான ஒலிவியர் காஸ்மரோவ்ஸ்கா என்பதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் வருத்தமடைகிறோம்' என தெரிவித்துள்ளார்.