ஒன்லைன் விளையாட்டுக்கு பணம் கேட்ட சிறுவன்: உறவினர் எடுத்த பயங்கர முடிவு
ஒன்லைன் விளையாட்டுக்காக பணம் கேட்டு தொந்தரவு செய்த தன் சகோதரியின் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் ஒருவர்.
ஒன்லைன் விளையாட்டுக்கு பணம் கேட்ட சிறுவன்
பெங்களூருவில் வாழ்ந்துவந்த அமோக் (Amogh, 15) என்னும் சிறுவன், ஒன்லைனில் விளையாடுவதற்காக தன் மாமாவான நாகபிரசாத்திடம் அடிக்கடி கடன் வாங்கிவந்துள்ளான்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நாகபிரசாத், பணம் கேட்டு தன்னைத் தொந்தரவு செய்துவந்த அமோகை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
சகோதரி மகனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட நாகபிரசாத், பின்னர் மூன்று நாட்களுக்குப் பின் பொலிசில் சரணடைந்துள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறி கிராமம் கிராமமாக நடந்து திரிந்த நாகபிரசாத், தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
பிறகு தன் முடிவை மாற்றிக்கொண்டு பொலிசில் சரணடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து பொலிசார் அவரது வீட்டுக்குச் செல்ல, அங்கு அமோகின் உடல் அழுகும் நிலையில் இருந்ததைக் கண்டு அதை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |