பிறந்தநாள் கொண்டாடிய 5 நாளில் காதலிக்கு நேர்ந்த சோகம்! ஆத்திரம் தீர சுட்டுக் கொன்ற காதலன்
அமெரிக்காவில், தனது காதலை கைவிட்டதால் காதலியை, காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலை தொடர மறுப்பு
அமெரிக்கா, கொலராடா மாகாணத்தில் கிரிலே புறநகர் பகுதியில் தென் வேர் என்ற இடத்தில் லில்லி சில்வா(15) என்ற பெண் வசித்து வருகிறார். இவரும், ஜோவனி சிரியோ (17) என்பவரும் காதலித்து வந்தனர்.
கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், லில்லி சில்வா தனது காதலை தொடர மறுத்துள்ளார். தன்னை இனி சந்திக்க வேண்டாம் என்று ஜோவனி சிரியோவிடம் கூறியுள்ளார்.
ஆனால், ஜோவனி சிரியோ பல முறை சந்தித்தும் லில்லி சில்வா அதனை மறுத்துள்ளார். இந்த சம்பவம் ஜோவனி சிரியோவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜோவனி சிரியோ மோட்டார் சைக்கிளில் லில்லி சில்வா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, படுக்கை அறையில் இருந்த லில்லி சில்வாவை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வைத்து ஆத்திரம் தீர சுட்டுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த லில்லி
அப்போது, துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து பக்கத்து அறையில் இருந்து லில்லி சில்வாவின் சகோதரர் ஓடி வந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த லில்லி சில்வா சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதன்பின்னர், லில்லி சில்வாவின் சகோதரரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஜோவனி சிரியோ தப்பி ஓடியுள்ளார். இதனால், யாரிடமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியவில்லை.
இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, ஜோவனி சிரியோவை கைது செய்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட லில்லி சில்வா 5 நாளுக்கு முன்பு தான் பிறந்தநாள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |