தீவிர சிகிச்சைப் பிரிவில் பாப் பாடகி மடோனா! வீடு திரும்பியதாக தகவல்
பிரபல பாப் பாடகி மடோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப் பாடகி
அமெரிக்காவில் மறைந்த பிரபலம் மைக்கேல் ஜாக்சனுக்கு போட்டியாக பாப் இசையுலகில் விளங்கியவர் மடோனா. தற்போது 64 வயதாகும் மடோனா, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரசிகர்கள் கலக்கமடைந்தனர். அதனைத் தொடர்ந்து மடோனாவின் மேலாளர் வெளியிட்ட அறிக்கையில், 'மடோனாவுக்கு தீவிரமான பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அதிக நாட்கள் தங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Elisabetta Villa
இப்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இன்னமும் அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். பூரண குணமடைந்து வருவார் என்று எதிர்பார்க்கிறோம்' என தெரிவித்திருந்தார்.
வீடு திரும்பிய மடோனா
இதன் காரணமாக மடோனாவின் 40வது ஆண்டு சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடுமையான பக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்ட மடோனா மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர் உயிர்பிழைத்திருக்க மாட்டார் என்ற அச்சத்தின் மத்தியில் இந்த செய்தி வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |