துப்பாக்கி முனையில் சிறார்களின் ஷூக்களை திருடிய பதின்பருவதினர்! அதிர்ச்சி வீடியோ
அமெரிக்காவில் உள்ள மால் குளியறையில் பதின் பருவ இளைஞர்கள், சிறார்களின் ஷூக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறார்களை பின்தொடர்ந்த இளைஞர்கள்
தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஷொப்பிங் மால் ஒன்றில், நான்கு சிறார்களை குளியலறை வரை பதின்பருவ இளைஞர்கள் இருவர் பின்தொடர்ந்துள்ளனர்.
பின்னர் துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டி ஷூக்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள்
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர்கள் மூன்று சோடி காலணிகள் மற்றும் ஒரு பேஸ்பால் தொப்பியுடன் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குளியறையில் இருந்த பதின்ம வயதினரில் யாராவது காயமடைந்தார்களா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
ஷூக்களை துப்பாக்கி முனையில் பதின்பருவத்தில் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |