இளம்பெண்ணின் போனுக்கு வந்த அவரின் நிர்வாண புகைப்படங்கள்! விசாரணையில் காத்திருந்த எதிர்பார்க்காத அதிர்ச்சி.. எச்சரிக்கை செய்தி
அமெரிக்காவில் வாடிக்கையாளரின் செல்போனில் உள்ள நிர்வாண புகைப்படங்களை திருடி அவருக்கே அனுப்பி மிரட்டிய வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஹாரிஸ் கவுண்டியை சேர்ந்த இளம்பெண் அங்குள்ள ஒரு வங்கிக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி சென்றுள்ளார்.
அங்கிருந்த ஊழியரான ஜூயன் எஸ்டிபன் ரமீரீஸ் (27) என்பவரிடம் தனது செல்போனை கொடுத்த அப்பெண் தனது வங்கி கணக்கு தொடர்பான தகவலைப் பெற உதவுமாறு கேட்டுள்ளார்.
இதன்பின்னர் சில நாட்கள் கழித்து முன்பின் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வேறு சில ஆபாச வீடியோக்கள் வந்தது.
மேலும், இந்த புகைப்படங்களை உன் பெற்றோருக்கு அனுப்புவேன் என மிரட்டும் வகையில் தகவலும் அனுப்பப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண் பொலிசில் புகார் அளித்தார்.
பொலிசார் குறித்த எண் குறித்து விசாரித்த போது அது வங்கி ஊழியர் எஸ்டிபனுடையது என தெரியவந்தது. தனது செல்போனை அப்பெண் அவரிடம் கொடுத்த போது எஸ்டிபன் நைசாக அதிலிருந்த புகைப்படங்களை தனக்கு அனுப்பி கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து பொலிசார் எஸ்டிபனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் சமீபத்தில் $1,500 ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் அடுத்த மாதம் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார் என தெரியவந்துள்ளது.
