பிரித்தானியாவில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சிறுமி: பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 சிறுவர்கள்
பிரித்தானியாவில் கத்திக்குத்து காயங்களுக்குடன் சிறுமி கண்டெடுக்கப்பட்ட நிலையில், 6 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட 13வது சிறுமி
பிரித்தானியாவின் ஹல்(Hull) அருகே சாலையோரத்தில் பலத்த கத்துக்குத்து காயங்களுடன் 13 வயது சிறுமி கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக ஆறு இளம் வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை, அக்டோபர் 30, 2024 அன்று காலை 6:50 மணி அளவில் ஹெஸ்லில் உள்ள A63 சாலையில் நிகழ்ந்துள்ளது.
கழுத்து, வயிறு, மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் கடுமையான காயங்களுடன் சிறுமி கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அவசர சேவைகள் வருவதற்கு முன்பே பொதுமக்கள் உதவி செய்ததாக ஹம்பர்சைடு(Humberside) காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
6 பேர் கைது
இதையடுத்து பொலிஸார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் எடுத்த உடனடி நடவடிக்கையில், அருகிலுள்ள காட்டுப் பகுதியில் 14 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட நான்கு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகளை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உள்ளாகி வருகின்றனர்.
சமீபத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியை அறிந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுவதாக காவல்துறை அதிகாரி சைமன் விகர்ஸ் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 14, 15, 16 மற்றும் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் மற்றும் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |