போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை
அமெரிக்கா போரை தொடங்கினால் அது டிரம்பிற்கு பெரிய பாடமாக இருக்கும் என்று ஈரான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
டிரம்பிற்கான பாடமாக போர் இருக்கும்
அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, இரு நாட்டு தலைவர்கள் முரணான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருவது நிலைமையை மிகவும் மோசமடைய செய்து வருகிறது.

இந்நிலையில் ஈரானிய ஆயுதப் படைகள் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் சையத் அப்துல்ரஹீம் மெளசவி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, அமெரிக்காவின் ஆக்ரோஷமான ராணுவ நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் வெளியுறவு கொள்கையின் முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டிய அவர், ஒரு புறத்தில் போருக்கு தூண்டுவதாகவும், மறுபுறத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் குறிப்பிட்டார்.

போருக்கு டிரம்ப் விரும்பினால், அவர் ஏன் பேச்சுவார்த்தை குறித்து பேச வேண்டும்? என சையத் அப்துல் ரஹீம் மெளசவி கேள்வி எழுப்பினார்.
மேலும் டிரம்பின் கருத்துக்கள் அற்பமானது மற்றும் தகுதியற்றது என்றும் உலக தலைவருக்கு தகுதியற்றவை எனவும் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரான் பதிலடி தாக்குதல் வெறும் தற்காப்பு தாக்குதலாக மற்றும் இருக்காது என்று மேஜர் ஜெனரல் தெளிவுபடுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |