ஈரான் குவித்து வைத்திருக்கும் ஏவுகணைகள்... காத்திருக்கும் பயங்கரமான நாட்கள்
ஈரான் தொடர்பில் கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் வரையில் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளின் குவியலை அந்த நாடு ரகசியமாக பாதுகாத்து வருகிறது என்றே தெரிய வருகிறது.
ஏவுகணை சாம்ராஜ்யம்
இஸ்ரேல் தொடங்கி வைத்த டொனால்ட் ட்ரம்பின் போருக்கு எதிராக ஈரான் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களை நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் போர் மூன்றாவது நாளாக தீவிரமடைந்து வருகிறது.

அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணையை ஈரான் உருவாக்கி வருவதாக டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளார். ஆனால், அது உண்மைக்குப் பிறம்பானது என ஐரோப்பிய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், சைப்ரஸில் உள்ள பிரித்தானிய RAF தளம் மீது ஈரான் தாக்குதல் தொடுத்துள்ள நிலையில், ஐரோப்பாவைத் தாக்கும் ஈரானின் ஏவுகணைத் திறன் குறித்த அச்சங்கள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் எவ்வாறு ஒரு ஏவுகணை சாம்ராஜ்யத்தை உருவாக்கி, அதை மேற்கு நாடுகளுக்கு ஒரு கொடிய பொறியாக மாற்றியது என்பதை பாதுகாப்பு ஆய்வாளர் சைமன் டிகின்ஸ் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஈரான் ஒரு தோல்வியுற்ற வல்லரசு என குறிப்பிடும் டிகின்ஸ், ஒரு வல்லசு நாட்டுக்கான ஆயுதங்களை ஈரான் உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஆதரவு இஸ்ரேலின் தொடர் சீண்டலை எதிர்கொள்ள ஈரான் தனது நீண்ட தூர ஏவுகணைகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. ஈரானின் Shahab-3 ஏவுகணை 1,300 கி.மீ தொலைவுக்கு சென்று தாக்கக்கூடியவை. Khorramshahr ஏவுகணையானது 3,000 கி.மீ.
இதனால், ஐரோப்பாவின் ருமேனியா, ஹங்கேரி மற்றும் கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் ஈரானின் ஏவுகணைக்கு இலக்காகலாம் என்றே கூறுகின்றனர். இதனாலையே ஈரான் மேற்கத்திய நாடுகளுக்கும் மேற்கத்திய நலன்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுகின்றனர்.

குறைத்து மதிப்பிட்டுள்ளன
ஆனால், ஈரான் இதுவரை எந்த நாட்டையும் பொய்யான காரணங்கள் கூறி ஆக்கிரமித்ததில்லை. ஈரான் தமக்காக துணிந்து போராடும் அமைப்புகளுக்கும் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளின் தடைகளால் ஈரானின் அதிநவீன ஆயுதங்களை உருவாக்கும் திறன் தடைபட்டுள்ளது.
ஆனால் வட கொரியா, லிபியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட்டு தற்போது தனது ஆயுதக் கிடங்கை ஈரான் ஒரு வல்லரசு நாடு போன்று கட்டமைத்து வருகிறது.

ஈரானின் உண்மையான ஆயுத பலத்தை இதுவரை மேற்கத்திய நாடுகள் அறிந்ததில்லை. மட்டுமின்றி, ஈரான் மற்றும் அதன் ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை மேற்கு நாடுகள் குறைத்து மதிப்பிட்டுள்ளன என்று சொல்வது நியாயமாக இருக்கலாம் என்றே டிகின்ஸ் குறிப்பிடுகிறார்.
ஈரான் 300,000 ஏவுகணைகளை ரகசியமாக பாதுகாத்து வருவதாக கூறப்படும் அதேவேளை, ஈரான் ஒரு அதிநவீன ட்ரோன் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
அதன் ஷாஹெத் ட்ரோன்களால் 2,000 கி.மீ தொலைவுக்கு சென்று தாக்க முடியும். இந்த ட்ரோன்கள் மிகவும் மலிவானவை, தொழில்நுட்ப ரீதியாக 35,000 டொலர் கூட செலவாகாது. ஆனால் இவைகளை முறியடிக்க, 4 மில்லியன் டொலர் வரையில் செலவிட வேண்டியிருக்கும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |